பிரிவு 3 சுற்றுப்போட்டிகள்
இலங்கை கிரிகட் சபையினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் பிரிவு 3க்கான சுற்றுப்போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு யாழ் பல்கலைகழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் ஸரான்லி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து யாழ் பல்கலைகழக அணி பங்குபற்றவுள்ளன.
மேற்படி சுற்றுப்போட்டியில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த இருபத்துநான்கு(24) அணிகள் பங்குபற்றவுள்ளன. எட்டு(8) பிரிவுகளாக வகுக்கப்பட்டு ஒரு பிரிவில் மூன்று(3) அணிகள் வீதம் போட்டியில் பங்குபற்றவுள்ளன.